இந்தோனேசியாவின் மீன்பிடித்தொழிலாளியான Dede என்பவர் ஆச்சரியமான,அசாதாரண தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடம்பில் கை,கால்ப்பகுதிகளில் மரவேர் போன்ற அமைப்பொன்று வளர்வதுடன், இதன் கிளைகள் வருடத்துக்கு 5Cm நீள அளவில் வளர்வதாக குறிப்பிடப்படுகின்றது.அத்துடன் அதன் தழும்புகள் உடம்பு பூராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூரில் இவரை "மரமனிதன்" என்றே அழைக்கின்றனர்.
சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக உள்ளூர் வைத்தியர்களினால் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக BBC இன் உலகின் "அசாதாரண மனிதர்கள்" சம்பந்தமான ஆவணக்காப்பகம் குறிப்பிடுகின்றது.
Dede யினுடைய மர்மமான தோல் நோய் சம்பந்தமான ஆராய்ச்சி முயற்சியில் University of Maryland ச் சேர்ந்த உலகின் தோல் நோய் வல்லுநர் Dr Anthony Gaspari, அவர்கள் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.