Saturday, August 7, 2010

சீன அருங்காட்சியகம் - கின்னஸ் சாதனை

பெய்ஜிங், ஆக.3:  சீனாவில் உள்ள ஷாங்டாங் தினாயூ அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகம் என்ற பெருமையோடு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.செப்டம்பர் 28-ம் தேதி தினாயூவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.கடந்த ஜூன் மாதம் கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்ததாகவும், அருங்காட்சியகம் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தற்கான உறுதி சான்றிதழை திங்கள்கிழமை பெற்றதாகவும் அதன் துணைக் காப்பாட்சியர் இயின் ஷியின் தெரிவித்தார்.சீனாவின் கிழக்குப் பகுதியில் பிங்ஜி கவுன்டி பகுதியில் இயற்கை எழிலுடன் கடந்த 2004-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.  டைனோசர்கள் மற்றும் முற்காலத்தில் வாழ்ந்த விலங்குகளை உள்ளடக்கியதாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.சுமார் 3 லட்சத்து 1,389 சதுர அடி பரப்பளவில் பார்வையாளர் மாடத்தைக் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் 1,106 டைனோசர்  உருமாதிரிகள், 70-க்கும் மேற்பட்ட பெயரிடப்பட்ட மற்றும் பெயரிடப்படாத டைனோசர் படிமங்கள் உள்ளதாக சீன அறிவியல் அகாதெமி தெரிவித்துள்ளது.

இத்தாலியப் பழமொழிகள்

1. கையுறை அணிந்த பூனை, எலியைப் பிடிக்காது. 
2. எதிர்காலம் ஆபத்திற்குள்ளாகும்போது மட்டும்தான், ஒருவன் தன் கடந்த காலத்தைக் குறித்து வேதனைப்படுகிறான். 
3. முட்டாள்களின் கூட்டத்தில் அறிவாளி கேலிக்குரியவன். 
4. உலகத்தில் உள்ள இருட்டு முழுவதும் நினைத்தாலும், ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அணைக்க முடியாது. 
5. ஒவ்வொரு துயரத்திற்கும் இருபது நிழல்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பகுதி நிழல்களை நீங்களேதான் தோற்றுவிக்கிறீர்கள். 
6. தொலைவில் கரையைக் கண்டுவிட்ட ஒரு பூனையோ, நாயோகூட ஒருபோதும் மூழ்கிச் செத்ததில்லை. 
7. ஒரு முறை துண்டிப்பதற்கு முன்பு மூன்று முறை அளந்து பார்த்துவிடுங்கள்.
8. எந்த மனிதனும் அறிவாளியாகவே பிறப்பதில்லை.
9. வாங்குபவர்களுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவர்களுக்கோ ஒன்றும் வேண்டாம்.
10. ஆசிரியர் என்பவர், தான் எரிந்து மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிற மெழுகுவர்த்தியைப் போலத்தான்.

பால் மட்டும் குடித்து உயிர் வாழும் மனிதர்!

தெற்கு மும்பையில் ஒருவர், பிறந்தது முதல், பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார்.தெற்கு மும்பையில் உள்ள கிர்காம் கிராமத்தில் வசிக்கும் தீபக் சோக்சி (69) என்பவர், பிறந்தது முதல், திட உணவு எதுவும் சாப்பிடாமல், பால், கோபி, டீ, போன்ற பானங்கள் மட்டுமே பருகி, உயிர் வாழ்கிறார்.
புகைப்படம் பிடிப்பாளராக தொழில் செய்யும் இவர், சிறு வயதில் 5 அல்லது 6 லிட்டர் பால் குடித்தார். வயது உயர உயர, அளவு குறைந்து, தற்போது 2 அல்லது 3 கிளாஸ் மட்டுமே குடிக்கிறார்.இவருடைய உணவு முறை குறித்து, டாக்டரிடம் சான்றிதழும் வாங்கி வைத்திருக்கிறார்.
உடலில் சத்து குறைபாட்டுக்காக, விட்டமின் மாத்திரைகளை மட்டும் உட்கொள்கிறார்.
இது குறித்து தீபக் கூறியதாவது: என் வாழ்நாளில் இதுவரை திட உணவுகளை உண்டதில்லை. நான் திட உணவு உட்கொள்ள வேண்டுமென்று கோரி, பெற்றோர், டாக்டர்களிடம் அழைத்து சென்றனர். ஒரு டாக்டர் என்னை ரொட்டி சாப்பிட வைக்க முயன்றார்.
ஆனால், நான் நாக்கைக் கடித்துக் கொண்டதால், டாக்டர் என்னை பால் மட்டுமே பருகுமாறு கூறினார்.பின் என் பெற்றோர், டாக்டர்களிடம் அழைத்து போவதை விட்டு விட்டு, கோவில் கோவிலாக ஏறத் தொடங்கினர்.ஆனால், எந்தவித பலனில்லை. தற்போது, 93 வயதாகும் என் தாயார், தான் இறப்பதற்குள், நான் உணவு உட்கொள்வதை பார்த்துவிட வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.
எனது திருமணத்தில் கூட, மற்றவர்கள் விருந்து சாப்பிட்ட போது, நான் ஒரே ஒரு கிளாஸ் டீ தான் குடித்தேன். காய்கறிகள், பழங்கள் பற்றியோ அதன் சுவை பற்றியோ கூட எனக்கு எதுவும் தெரியாது. ஒரு முறை என் தாய், வெண்டைக்காய் வாங்கி வருமாறு கூறினார்;.
நான் கத்தரிக்காய் வாங்கிக் கொடுத்து, "பாட்டு' வாங்கிக் கொண்டேன்! இதுவரை எனக்கு திட உணவை சாப்பிட வேண்டுமென்ற எண்ணமே தோன்றியதில்லை. அதை பற்றி நினைத்தாலே எனக்கு வாந்தி வரும்.இவ்வாறு தீபக் கூறினார்.
இது குறித்து தீபக்கின் மருமகள் எலீசா கூறியதாவது:திருமணத்திற்கு முன்பு, எனது கணவர், தனது தந்தை இதுவரை உணவே உண்டது இல்லையென்றும், வெறும் பால் தான் குடிப்பார் என்றும் கூறினார். அதை நான் நம்பவில்லை. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்து, மாமனாரை பார்த்த பின் தான் நம்பினேன். அவர் உணவே உண்பதில்லை; நாங்கள் சாப்பிடுவதை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.இவ்வாறு எலீசா கூறினார்.

' சம்சுங் ' இன் ' கலெக்சி டெப் '

  பிரபல இலத்திரனியல் உபகரண மற்றும் கையடக்கத்தொலைபேசி நிறுவனமான ' சம்சுங் ' புதிய டெப்லட் கணனியொன்றை வெளியிடவுள்ளது.
அந் நிறுவனம் தான் வெளியிடவுள்ள டெப்லட் கணனிக்கு ' கலெக்சி டெப் ' என பெயரிட்டுள்ளது.
இக் கணனியின் உத்தியோகபூர்வ அறிமுகம் இம் மாதம் 11ம் திகதி இடம்பெறுமெனவும் இவ்வருட 2ம் காலண்டு நிறைவுக்குள் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி கணனியானது கூகுளின் அண்ட்ரொயிட் ' புரோயா ' இயங்குதளத்தினை கொண்டதாகும்.
7 அங்குல தொடுந்திரை மற்றும் 1.2GHz சம்சுங் ' ஹம்மிங் பேர்ட் ' புரசஸரை கொண்டுள்ளது.
16 ஜிபி உள்ளக சேமிப்பு வசதியை கொண்ட இக் கணனியில் பிளேஷ் உடன் கூடிய 3.2 மெகா பிக்ஸல் கமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் வீடியோ காண்பிரண்ஸ் மற்றும் ' வை-பை ' வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
வளர்ந்துவரும் கணனிச் சந்தையில் ' டெப்லட்' கணனிகளின்' ஆதிக்கம் அதிகமாகவுள்ளதாகவும் இதன் விற்பனை வீதமானது நோட் புக் கணனிகளின் விற்பனையை பின் தள்ளியுள்ளதாகவும் சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அப்பிள் நிறுவனம் ' ஐ பேட் ' எனப்படும் தனது டெப்லட் கணனிகளை உலகளாவியரீதியில் 3.7 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந் நிறுவனத்தின் ' கலெக்சி ' வகை கையடக்கத் தொலைபேசிகள் மிகவும் பிரபலமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ச.கவிந்தன்.

காலத்திற்கும் கலைக்குமான முகாலயப்பேரரசு

காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.
தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இரண்டரை கிலோ மீற்றர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை, ஆயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது.
முகலாயப் பேரரசர் ஷா ஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ், காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன.
தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ் மஹாலை - தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது - மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷா ஜஹான் என்று வரலாறு கூறுகிறது.
ஆக்ரா கோட்டைக்குள் ஷா ஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ் மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம்.
இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷா ஜஹானுக்கே உரியது.
அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்.
இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் - அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் - முகலாய பேரரசு , பலமாக காலூன்ற உதவியது.
பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆப்கானிய அரசர் ஷேர் ஷா கைவசமானது இக்கோட்டை.
1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார்.
இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷா ஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.
பேரரசர் அக்பர் உறுதியாகக் கட்டிய இக்கோட்டையின் சில பகுதிகளை இடித்துவிட்டு, பளிங்கு கற்களைக் கொண்டு பேர்ரசர் ஷா ஜஹான் கட்டிய கூடங்களும், கோபுரங்களும்தான் இக்கோட்டைக்கு பெருமை சேர்த்தன.
இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷா ஜஹானுக்கே உரியது.
அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்.
இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் - அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் - முகலாய பேரரசு வளமாக, பலமாக காலூன்ற உதவியது.
பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆஃப்கானிய அரசர் ஷேர் ஷா கைவசமானது இக்கோட்டை.
1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார்.
இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷா ஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.