1. கையுறை அணிந்த பூனை, எலியைப் பிடிக்காது.
2. எதிர்காலம் ஆபத்திற்குள்ளாகும்போது மட்டும்தான், ஒருவன் தன் கடந்த காலத்தைக் குறித்து வேதனைப்படுகிறான்.
3. முட்டாள்களின் கூட்டத்தில் அறிவாளி கேலிக்குரியவன்.
4. உலகத்தில் உள்ள இருட்டு முழுவதும் நினைத்தாலும், ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அணைக்க முடியாது. 5. ஒவ்வொரு துயரத்திற்கும் இருபது நிழல்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பகுதி நிழல்களை நீங்களேதான் தோற்றுவிக்கிறீர்கள்.
6. தொலைவில் கரையைக் கண்டுவிட்ட ஒரு பூனையோ, நாயோகூட ஒருபோதும் மூழ்கிச் செத்ததில்லை.
7. ஒரு முறை துண்டிப்பதற்கு முன்பு மூன்று முறை அளந்து பார்த்துவிடுங்கள்.
8. எந்த மனிதனும் அறிவாளியாகவே பிறப்பதில்லை.
9. வாங்குபவர்களுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவர்களுக்கோ ஒன்றும் வேண்டாம்.
10. ஆசிரியர் என்பவர், தான் எரிந்து மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிற மெழுகுவர்த்தியைப் போலத்தான்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.