Saturday, August 7, 2010

சீன அருங்காட்சியகம் - கின்னஸ் சாதனை

பெய்ஜிங், ஆக.3:  சீனாவில் உள்ள ஷாங்டாங் தினாயூ அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகம் என்ற பெருமையோடு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.செப்டம்பர் 28-ம் தேதி தினாயூவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.கடந்த ஜூன் மாதம் கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்ததாகவும், அருங்காட்சியகம் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தற்கான உறுதி சான்றிதழை திங்கள்கிழமை பெற்றதாகவும் அதன் துணைக் காப்பாட்சியர் இயின் ஷியின் தெரிவித்தார்.சீனாவின் கிழக்குப் பகுதியில் பிங்ஜி கவுன்டி பகுதியில் இயற்கை எழிலுடன் கடந்த 2004-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.  டைனோசர்கள் மற்றும் முற்காலத்தில் வாழ்ந்த விலங்குகளை உள்ளடக்கியதாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.சுமார் 3 லட்சத்து 1,389 சதுர அடி பரப்பளவில் பார்வையாளர் மாடத்தைக் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் 1,106 டைனோசர்  உருமாதிரிகள், 70-க்கும் மேற்பட்ட பெயரிடப்பட்ட மற்றும் பெயரிடப்படாத டைனோசர் படிமங்கள் உள்ளதாக சீன அறிவியல் அகாதெமி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.