‘உலக வரலாற்றில் 2010ம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டு என, அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நிலம் மற்றும் கடலின் மேற்பரப்பில் நிலவிய வெப்பநிலையை கணக்கிட்டு பார்த்து, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
உலகில் உள்ள நாடுகளிலுள்ள வெப்பநிலை முழுவதையும் ஆய்வு செய்து, அதன் சராசரி அளவை சேகரித்தனர். இதில், உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தாண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டு என்பது தெரிய வந்துள்ளது. இந்த நான்கு மாதங்களில், உலகின் சராசரி வெப்ப நிலை 13.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது, கடந்த 20ம் நூற்றாண்டில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட 0.69 டிகிரி செல்சியஸ் அதிகம். இதேபோல், இந்த நான்கு மாதங்களில், ஏப்ரல்தான் அதிகம் வெப்பமான மாதமாக இருந்துள்ளது. இவ்வாறு வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Thanks To........Malasiyaindru.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.