Tuesday, June 22, 2010

குவைத் இளவரசர் சுட்டுக்கொலை!

குவைத் நாட்டு இளவரசர் ஷேக் பசேல் சலீம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றது அவருடைய சொந்த மாமா என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்த குவைத் அரசுரீதியிலான செய்திக்குறிப்பில் 'இளவரசர் சேக் பசல் சலீம் சபா அல் சலீம் அல் சபா அகால மரணம் அடைந்து விட்டார்' என்று கூறப்பட்டுள்ளது. அவர் எப்படி இறந்தார் என்ற தகவல்களை குவைத் அரசு தெரிவிக்கவில்லை.
அகால மரணம் அடைந்த இளவரசர் சேக் பசல் சலீம்- க்கு வயது 52.
 சேக் பசல் சலீம்- க்கும் அவருடைய மாமா முறையிலான உறவினர் ஒருவருக்கும் இடையே கார் வாங்குவது குறித்து வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த மாமா, சேக் பசல் சலீமை நோக்கி பலமுறை சுட்டிருக்கிறார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார் என்று கூறப்படுகிறது.
இளவரசரைக் கொன்ற கொலையாளி கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
சேக் பசல் சலீம் குவைத் அரசராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks To......www.z9world.com

2 comments:

  1. உடல் தகனம் - என்பது இஸ்லாமிய மக்களுக்கு உண்டா?
    நல்லடக்கம் என்றுதானே அவர்கள் உடலைப் புதைப்பதைக் கூறுவார்கள்.

    ReplyDelete
  2. நண்பர் யோகன்.
    உடல் தகனம் என்ற வார்த்தைப் பிரயோகம் தவறுதலாக இடம் பெற்றுள்ளது.
    நல்லடக்கம் என்பதே சரி.தவறைச் சுட்டி காட்டியமைக்கும் தங்களின் வருகைக்கும் நன்றிகள்.

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.