கூகுள் நால்
கூகுள் தளத்தின் இந்த பிரிவைப் பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். கூகுளைப் பொறுத்தவரை ஒரு knol என்பது ஒரு பொருள் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிக்கும் ஒரு கட்டுரை. ஒருவரின் தெளிந்த அறிவின் ஓர் அளவு. இந்த வகையில் http://knol.google.com என்ற முகவரியில் கூகுள் ஓர் இணைய தளப் பிரிவினை உண்டாக்கி பல பொருள் குறித்த கட்டுரைகளைப் போட்டுள்ளது. என்ன! கிட்டத்தட்ட விக்கி பீடியா போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? ஆம், அதற்குப் போட்டியாகத்தான் இது தொடங்கப்பட்டது என அனைவரும் எண்ணுகின்றனர். இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.
இந்த கட்டுரைகளைப் படிப்பது வெகு எளிது. http://knol.google.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு முதலில் செல்லுங்கள். அங்கு நீங்கள் எது குறித்து படிக்க வேண்டுமோ அதனைத் தேடுங்கள். தேடுதல் வசதிகளைத் தருவதில் கூகுளின் திறன் அனைவரும் அறிந்த ஒன்று. எனவே நீங்கள் தேடி எடுத்துப் படிக்க வேண்டிய கட்டுரைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். இவற்றிலிருந்து நீங்கள் படிக்க விரும்பும் கட்டுரையைத் தேடிப் பெற்று படிக்கலாம். நான் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறித்துத் தேடிய போது 774 நால் ( knol ) இருப்பதாக தெரிவித்தது. இந்த கட்டுரைகள் அவரின் வெளிநாட்டுக் கொள்கை முதல் பராக் ஒபாமா பெயரில் வந்திருக்கும் பொருட்களை எப்படி மலிவாக வாங்கலாம் என்பது வரை இருக்கின்றன.
ஓ.கே. விக்கிபீடியாவினைப் போல இங்கு நாம் எழுதும் கட்டுரையினைப் பதிக்க முடியுமா என்று உங்களுக்கு ஓர் ஆர்வம் உண்டாகலாம். நிச்சயமாக அந்த வசதியும் இந்த தளத்தில் உள்ளது. உங்கள் கட்டுரையைப் பதிக்க வேண்டும் என்றால் http://knol.google.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு முதலில் செல்லவும். அதன்பின் Write a Knol என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் முதலில் பதிவு செய்யச் சொல்லி கேட்கப்படும்.
உங்கள் கூகுள் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து செல்லவும். என்ன! உங்களுக்குக் கூகுள் அக்கவுண்ட் இல்லையா! அப்படியானால் கூகுள் தளம் சென்று ஓர் அக்கவுண்ட் உடனே அமைக்கவும். பின் மீண்டும் இங்கே வந்து கட்டுரையைப் பதிக்கும் பணியைத் தொடரவும்.
இப்போது Write a Knol என்ற பட்டனை அழுத்தியவுடன் கட்டுரையினை அமைக்க ஓர் அடிப்படை கட்டமைப்பு உங்களுக்குத் தரப்படும். இங்கு உங்களுக்கான லைசன்ஸையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த லைசன்ஸ் பெற்றுக் கொள்வது உங்களுக்கு நல்லதுதான். ஒரு ஸ்டேட்டஸும் கிடைக்கும். மூன்று வகையான லைசன்ஸ் இருக்கும்.
உங்கள் கட்டுரையை மற்றவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான வரையறையை இது வகுத்துத் தரும். இதனைப் பெற்றுக் கொண்டு உங்கள் கட்டுரையை இதில் பதிக்கவும். உலகத் தரத்திலான தகவல் களஞ்சியத்தில் உங்கள் கட்டுரை இடம் பெற வழி கிடைத்துவிட்டதே. உங்களுக்குத் தெரிந்த பொருள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதி உடனே இதில் பதிக்கத் தொடங்குங்கள்.

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.