Friday, December 16, 2011

எலும்பு மற்றும் முதுகு

1. விபத்தில் காயம் பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தை விட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரை தான் பலம் பெறும். அதன் பிறகு மெல்ல வலு விழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்பு
த்தானா? நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும் படி அமர்கிறோமா? என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்து கொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
தகவல் - மனசாலி

Tuesday, December 13, 2011

Who is Great?

 Wikipedia : I know Everything.

Google          : I Have Everything.

Facebook     : I Know Everybody.

Internet       : Without Me All Nothing.

Electricity    : Keep Talking Bitches.







Friday, November 25, 2011

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா  கடை. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு.
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது எங்கும் கிடைக்கிறது.  இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். 
இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டுமல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்கப்
படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது. ஆக, பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல.
மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும். இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்புள்ளது.
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளறு ,
நிரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் 
நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு  பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
நன்றி, எனது கருத்து இணையம்.

20,000 இலங்கையருக்கு தென்கொரியாவில் ஓய்வூதியம்.


தென் கொரியாவில் தொழில் புரியும் சுமார் 20,000 இலங்கையர்களும் கொரியாவின் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள னர். இலங்கையர்களுக்கென 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொரிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் படி, சுமார் மூன்று இலட்சம் ரூபா வரையில் இலங்கையர் ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவாக பெறுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக் கிறது.
கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்று கடந்த 22ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத் துக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது.
அமைச்சின் செயலாளர் கர்னல் நிஸ்ஸங்க என். விஜேரட்னவும், கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீசியோங் ஹ¥ன் என்பவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அமைச்சர் டிலான் பெரேரா முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தம் ஊடாக ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களின் விபரங்களை அமைச்சுக்கு ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை கட்டம் கட்டமாக பெற்றுக் கொடுக்க கொரிய அரசு முன்வந்துள்ளது.
இத்தகவல்களின் அடிப்படையில் இலங்கையரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு அமைச்சினூடாக உறுதிப்படுத்தப்பட்டு கொரிய ஓய்வூதிய திணைக்களத்துக்கு அனுப்பப்படும்.
அனுப்பப்பட்ட தரவுகள் சரியானதாக இருக்கிறது என்பதை கொரிய திணைக்களம் உறுதி செய்த பின்னர் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவருக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும். தென் கொரியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் டிலான் பெரேராவின் வேண்டுகோளை ஏற்றே கொரிய அரசு இந்த ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்தியுள்ளது.
Thanks to Thinakaran.

Monday, November 14, 2011

  நீண்ட ஆயுளின் ரகசியம்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர். அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது. என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பது தான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.
தனது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்கள் அனைவருமே 52 வயது முதல் 79 வயதுக்குள்பட்டவர்கள். சுமார் 4 ஆயிரம் பேரிடம் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் முடிவை கட்டுரையாக வெளியிட்டுள்ளார் ஸ்டெப்டோ. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்கு மன இறுக்கம் குறைவதற்கான ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தன. ஆனால் பேராசிரியர் ஸ்டெப்டோவின் ஆராய்ச்சி முடிவுகள் எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட 4 ஆயிரம் பேரிடமும் தினசரி நான்கு முறை அவர்களது மனோ நிலை எப்படி என்று கேட்கப்பட்டு அதற்கான விடை பதிவு செய்யப்பட்டது. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு அவர்களது மனோ நிலையும் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட்டது. ஒவ்வொருவரின் வயது, பாலினம், மன இறுக்கம், அவர்களுக்கு இருந்த நோய்கள், உடலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியன ஆராயப்பட்டன. இதில் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு எவ்வித நோயும் அண்டவில்லை. மேலும் இத்தகையோர் குறைந்த வயதில் உயிரிழப்பதும் இல்லை என்பது அறியப்பட்டது. இதிலிருந்து உடலியல் ரீதியிலான மாற்றம் சந்தோஷமாக இருப்பவர்களிடையே இருப்பது புலனாகியுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது புரிந்தது என்று ஸ்டெப்டோ தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். மன இறுக்கத்துக்குக் காரணமான கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பு இவர்களுக்குக் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதும் என்ற மனதுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Saturday, November 5, 2011


நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு கேடு.

 
நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியது.அதிக உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வர காரணமாக அமைகிறது.
அண்மையில்  நடைபெற்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் வட்ட மேசை மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனியாகக் கருதப்படும் பர்கர், உருளைக்கிழங்கு வறுவல், சமோசா, குளிர்பானங்கள் போன்றவை குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.
அதனால் பள்ளிக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகளை அகற்ற பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்ளப் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைகிறது. ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய கணக்கின் படி 5 கோடிக்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் என்றும் இது 2025-ம் ஆண்டிற்குள் 9 கோடியைத் தாண்டி விடும் என்றும் தெரிவிக்காப்படுகிறது.

Friday, November 4, 2011

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு வசதிகளுடன் பிளாக்பெர்ரி


ஹஜ் பயணிகளுக்கு மிகவும் உபயோகமான தகவல்களைக் கொண்டதாக பிளாக்பெர்ரி (Blackberry) மொபைல் போன் வந்துள்ளது. புனிதப் பயணத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு உபயோகமான விஷயங்கள் பிளாக்பெர்ரி மொபைலில் இடம்பெற்றுள்ளன.
இதற்கான சாஃப்ட்வேரை பிளாக்பெர்ரி நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்கேட்ஸ் உருவாக்கியுள்ளது. பிளாக்பெர்ரி பயன்படுத்துவோர் இந்த சாஃப்ட்வேரை  ஆப்வேர்ல்ட் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இந்த சாஃப்ட்வேர் அரபு, ஆங்கிலம், துருக்கி, பார்சி, உருது மற்றும் பஹசா உள்ளிட்ட 6 மொழிகளில் செயல்படும். ஹஜ் புனித யாத்திரைக்கான வழி உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம். வீடியோ காட்சிகளும் இதில் உள்ளன. இஹ்ரம் முதல் உம்ரா வரை அனைத்து புனித யாத்திரை சார்ந்த விஷயங்களும் இதில் விளக்கமாக உள்ளது. 
பட விளக்கம், படக் காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளாக இவை இடம்பெற்றுள்ளன.

Saturday, September 17, 2011

நெற்றிக்கண்ணுடன் பிறந்த குழந்தை!

சென்னை : சென்னையில் நெற்றிக்கண்ணுடன் பிறந்த 5 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த இக்குழந்தையின் உடல் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் எனத்தெரிகிறது.
மதுரவாயலை சேர்ந்தவர் சத்யராணி(24). ஐந்து மாத கர்ப்பிணியான இவர் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பமீதா, உமாசாந்தி ஆகியோர் பரிசோதனை செய்தனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் குழந்தை ஒருவித அசைவுமின்றி இருந்தது.
இதையடுத்து, உடனடியாக குழந்தை வெளி கொண்டுவர சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று இரவு அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இடதுபுறம் ஒரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணும் இருந்தது. ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்கள் இருந்தன. மூக்கு இல்லை. இந்த குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் கீதாலட்சுமி கூறுகையில், ‘‘லட்சத்தில் ஒருவருக்கு இதுபோன்ற குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சொந்தத்தில் திருமணம் செய்வதாலும், டாக்டர்களின் ஆலோசனை இன்றி மருந்துகள் சாப்பிட்டாலும் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது.
21 வாரங்களே ஆன இந்த குழந்தைக்கு அனைத்து உறுப்புகளும் இருந்தாலும், சுவாசிக்க மூக்கு இல்லாததால் இறந்து விட்டது. கர்ப்பம் தரித்த பெண்கள் 3 மற்றும் 5வது மாதம் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த குழந்தையின் உடல் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்’’ என்றார்.

வல்லரசின் வறுமை

பேர தேசம் என்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த அமெரிக்காவில் ஏழ்மை வேகமாக பரவுகிறது என்று தேசிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. சென்ற ஆண்டில் மட்டும் 26 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே விழுந்திருக்கிறார்கள் என அதிர வைக்கிறது புள்ளிவிவரம். 4 கோடியே 62 லட்சம் அமெரிக்கர்கள் குடும்பம் நடத்த வழி தெரியாமல் ஏழ்மையில் தவிக்கிறார்களாம். அந்த நாட்டின் ஜனத்தொகை 31 கோடி. அதில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். 15 சதவீதத்துக்கு மேல். 

அரசின் கட்டுப்பாடுகள் இல்லாத தாராளமய பொருளாதாரம் தான் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு காரணமாக போற்றப்பட்டது. அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கும் வித்திட்டது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் உணர நேர்ந்தது. அப்போது தொடங்கிய வேலை இழப்பு இன்றுவரை வேகம் குறையவில்லை. அங்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலான கம்பெனிகள் இந்தியாவுக்கு பணிகளை மாற்றுவதாக ஏற்கனவே சலசலப்பு இருந்தது. சென்ற ஆண்டில் ஏறத்தாழ 9 கோடி அமெரிக்கர்கள் ஏதோ ஒரு கட்டத்திலாவது வேலையின்றி அல்லாடினர் என்று அரசு கணக்கிட்டுள்ளது. 

ஆள் குறைப்பு செய்த கம்பெனிகள் சம்பள உயர்வையும் நிறுத்தி வைத்தன. விலைகளும் கட்டணங்களும் உயரும் போது வருமானம் குறைந்ததால் தனிநபர் கடன் அதிகரித்தது. வேலையிழப்புக்கு அடுத்த வில்லனாக வந்திருப்பது மருத்துவ செலவு. பணக்காரர்கள் மட்டுமே தாங்க முடியும். எனவேதான் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க ஒபாமா போராடுகிறார். 

அநேக நாடுகளில் நடப்பது போலவே அங்கும் மேல் தட்டு மக்களின் வருமானம் தொடர்ந்து கொழிக்கிறது. மேலே உள்ள 10 சதவீதம் பேரின் சராசரி வருவாய் 1,38,900 டாலர். கீழே உள்ள பத்து சதத்தின் சராசரி வருவாய் 11,900 டாலர். ஐம்பது சத மக்களின் வருமானம் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில் நிற்கிறது.


மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். திருமணம் செய்ய முடியாமலும் குடும்பம் அமைக்க முடியாமலும் திணறுகின்றனர். இதுவரை கண்டிராத சமூக பிரச்னைகள் வெடிக்கும் அபாயம் தெரிகிறது. உலகை ஆள விரும்பிய வல்லரசின் நிலை அனைத்து நாடுகளுக்கும் பாடமாக மாறியிருக்கிறது. யாருக்கெல்லாம் அதை படிக்க மனம் இருக்கிறது?

Wednesday, August 24, 2011

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம்

உலகிலேயே  மிக உயர்ந்த கட்டிடம்  சவுதி அரேபியாவின்  ஜித்தாவில், ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.2008 இல் இதற்கான திட்டப்பணிகள்  தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் (852 மைல்) உயரத்தில் இந்த  ஹோட்டல் உருவாக்கப்படவுள்ளது. சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம்.

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாகத் தற்போது துபாய் நகரின் பூர்ஜ் கலிஃபா கட்டிடம்.திகழ்ந்து வருகிறது.




Wednesday, August 10, 2011

ஓட்டமாவடியில் மர்ம மனிதன் ?

இலங்கை பூராகவும் பரவி அச்சத்தில் ஆழ்த்தி வரும் மர்ம மனிதன் பற்றிய செய்தியினால் மக்கள் நிம்மதி இழந்து, நோன்பு காலத்தில்  தங்களது கடமைகளை  சரி  வர செய்து கொள்ள முடியாமலும், இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாத  அச்ச நிலையும் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில்,
இன்று ஓட்டமாவடி, நாவலடி-கேணி நகர்ப்பிரதேசத்தில் வீட்டில் இருந்த பெண்ணொருவர்,  அங்கு சென்ற ஒரு வலிபனால் கீறிக்காயப்படுத்தப்பட்ட  நிலை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பேரில் கிராமவாசிகளால் துரத்திப் பிடிக்கப்பட்ட குறித்த வாலிபரை மக்கள் தாக்கி காயப்படுத்தி பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்த  நிலையில், அந்நபரை மீள ஒப்படைக்கும் படி பொலிசாரிடம் பொது மக்களில் ஒரு சாரார் கேட்டுக்கொண்ட போது பொலிசாருக்கும், பொது மக்களுக்குமிடையே கை கலப்பு நிகழ்ந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, கை கலப்பை கட்டுப்படுத்தத் வந்த பொலிசாரினால் கண்மூடித்தனமாக  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் இறைச்சிக்கடை காலிதீன் என்பவர் காலில் காயப்பட்ட நிலையில் மீராவோடை ஆதார வைத்தியசாலையிலும், மீராவோடையைச்சேர்ந்த பாறூக் ஹாஜியார்( பலகைக்கடை) தலையில் குண்டடி பட்ட நிலையில் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தை தொடர்ந்து, மட்டக்களப்பு- கொழும்பு வீதியில் வாகனப்போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், அடிக்கடி பொலிசாரின் துப்பாக்கி வெடி சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தது.
கடைகள் மூடப்படு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், மக்கள் அச்சம் கலந்த மன நிலையில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடைப்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

Friday, August 5, 2011

மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க...!

1.தானே பெரியவன் தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.(படைத்தவன் மட்டும் தான் பெரியவன் என்று நினையுங்கள்.)
2.அர்த்தமில்லாமலும் தேவையில்லாமலும் பின் விளைவுகள் அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை தவிருங்கள்.
3.எந்த விஷயத்தையும் பிரச்சினையயும் நாசுக்காகக் கையாளுங்கள்.
4.சில நேரங்களில் சில சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
5.நீங்கள் சொன்னதே சரிசெய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
6.குறுகிய மனப்பான்மையை விட்டொழிங்கள்.
7.உண்மை எதுபொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் வ்ட்டுவிடுங்கள்.
8.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
9.அளவுக்கதிமாக தேவைக்கதியமாய் ஆசைப்படாதீர்கள்.
10.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
11.கேள்விப்படுகிற எல்லா விஷ்யங்களையும் நம்பி விடாதீர்கள்.
12.அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
13.உங்கள் கருத்துக்களில் உலக விஷயத்தில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். மார்க்க விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்யாதீர்கள்.
14.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
15.மற்றவர்களுக்கு உரிய மரியதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
16.புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
17.பேச்சிலும் நடத்தையிலும் திமிர்த்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கைக் காட்டுவதை தவித்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
18.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள்.
19.பிணக்கு ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
20.தேவையான இடங்களில் நன்றியையும்,பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை,அதற்காக ஓவர் பில்டப் கொடுத்து பொய்யாக எதையாவது சொல்லி வைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு தலைவலியாகவும் அல்லது வெற்றியாகவும் அமையலாம்.

Thursday, August 4, 2011


தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபத்த்தில் பிறந்த 22 வயது, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் (Wayne Dillon Parnell) 28.7.2011 வியாழக்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இவர் தென் ஆப்ரிக்கா சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்(Left-arm medium-fast) என்பது குறிப்பிடத்தக்கது.
பேர்நெல் கிறிஸ்துவ மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தை தழுவி இருக்கிறார். இவருடைய பெயரை வலீத் (பொருள்:புதிதாக பிறந்த மகன்) என்று தனது பெயரை மாற்றிக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வெய்ன் இரண்டு மாதங்களுக்கு முன்பே இஸ்லாத்தை பின்பற்ற முடிவு செய்துவிட்டார்,” என்று தென் ஆப்ரிக்கா அணி மேலாளர் டாக்டர் முகம்மது மொசாஜி தெரிவித்துள்ளார்.
ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் போன்ற சக வீரர்களின் வற்புறுத்தலினால் தான் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் என்ற வதந்தியை மொசாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது அவருடைய சொந்த முடிவு எனவும் மொசாஜி கூறினார்.
மொசாஜியின் மறுப்பை ஆதரிக்கும் வகையில் தென் ஆப்ரிக்காவின் மற்ற அணி வீரர்களும் ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் , பேர்நெலை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. ஆம்லாவின் ஒழுக்கம் ,சுற்றுப்பயணத்தின் போதும் தினசரி தொழுகை,மதுபான கொண்டாட்டங்களில் பங்கேற்காதது ,தென் ஆப்பிரிக்க அணியின் விளம்பரதாரரான பீர் கம்பெனியை விளம்பரப்படுத்த மறுத்தது போன்ற இவரின் செயல் அனைவரையும் ஈர்க்கத்தான் செய்தது.
பேர்நெல்லுடைய சக விளையாட்டு வீரர்கள் ,கடந்த IPL (Indian premier League) போட்டியில் பேர்நெல் மது அருந்தாததை வைத்தே அவர் தன் மதத்தை மாற்றுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.
ஒரு முஸ்லிமின் ஒழுக்கத்தை பார்த்தே மாற்று மதத்தினர் இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பிக்கின்றனர்.நாமும் இஸ்லாத்தின் ஒழுங்குகளை பேணி நமக்கு நன்மை தேடிக் கொள்வதோடு பல மாற்று மத சகோதரர்கள் நேர்வழி பெற உதவுவோம்.

Wednesday, August 3, 2011

இஸ்லாமியர்களுக்கு 
கூகுள் கொடுத்துள்ள ரமழான் பரிசு

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து
நேரடியாக  பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.
இந்த இணைப்பிற்கு செல்லவும்.
கூகுளுக்கு நன்றிகள்.

Monday, August 1, 2011

கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்.

நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன.
ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை:





நன்றி. வீரகேசரி.

Wednesday, July 27, 2011

ஜப்பானின் அற்புதமான தொழில்நுட்பம்.

இதனை நன்று உற்றுப்பாருங்கள். என்னவாக இருக்கக் கூடும்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?
பேனாக்களா? இல்லை.
இன்றைய நவீன உலகில் கணனியின் தேவை தவிர்க்க முடியாத ஒன்று என்பதுடன், அது பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பேனா அமைப்புக்களில் அமைந்த, ஆடைகளில் செருகிக்கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய கணணிகளை புதிய  தொழிநுட்பத்தின் முன்னோடிகளான ஜப்பானியர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கீழ் வரும் படங்களில் காணலாம்.









கண் பார்வைக்குறைபாடு.

கண்களில் ஏற்படும் பார்வை கோளாறுகள் இரண்டு வகையாக பிரிக்கப்படும்.
1. "மயோபியா' அல்லது கிட்டப் பார்வை

2. "
ஹைப்பர்மோட்டிரோப்பியா' அல்லது தூரப் பார்வை
மயோபியா'வில், தொலைவில் உள்ள எழுத்துக்கள் மற்றும் பொருட்கள் மங்கலாக தெரியும். அருகில் உள்ள பொருட்கள் தெளிவாக தெரியும். இது, பிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை, யாருக்கும் வரலாம். பொதுவாக, சிறு வயதிலேயே கண்டுபிடித்து விடலாம். தொலைதூர கண்பார்வை குறைவு, தலைவலி, கண்ணில் நீர் வழிதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு, வகுப்பில், போர்டில் எழுதும் எழுத்துக்கள் மங்கலாக தெரிகிறது என்பர். 
மேலும், கண்களை வேகமாக அடித்தல், அதிக சோர்வு நிலை மற்றும் கண்ணை சுற்றி வலி போன்ற பிரச்னைகளும் வரலாம். மயோபியா உள்ளவர்களுக்கு, "மைனஸ் பவர்' இருக்கும். மேற்கண்ட சிரமங்கள் இருந்தால், உடனே கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.
கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் போன்ற தீர்வுகள் இதற்கு உண்டு. இந்த தேதியில், பல நவீன முறை சிகிச்சைகள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செய்யப்படுகின்றன. கண்ணாடி அணிவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே, "லாசிக்' எனும் லேசர் முறை சிகிச்சை கொண்டு வரப்பட்டது. "சையாப்டிக்ஸ்' (Zyoptix) எனும் லேசர் முறையில், கண்ணில் இருக்கும், 
"மைனஸ் பவர்' குறைக்கப்படுகிறது. இப்போது, நவீன லேசர் சிகிச்சையான, "இன்ட்ராலேஸ்' (Intralase) முறை மூலம், பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம்.
கருவிழியின் தடிமன் குறைவாக இருப்பின், அதை வெறும், "சையாப்டிக்ஸ்' மூலம் சரி செய்ய இயலாது. ஆனால், "இன்ட்ராலேஸ்' உதவியுடன் இதை முழுமையாக குணப்படுத்த முடியும். மேலும், "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்'சில், பக்க விளைவுகள் மிகவும் குறைவாக காணப்படும்.
கண்ணாடி அணிந்தும் கண் பார்வை குறைவாகவே இருக்கும் நோயாளிகளுக்கு, "ஆர்ப்ஸ்கேன்' (Orbscan)மற்றும் "அபரோமேட்டிரி'(Aberrometry) ஆய்வு செய்யப்பட்டு, பின்னர், "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' செய்யப்படும். பொதுவாக கண்ணாடி அணிந்தும் கண் பார்வை குறைவாக உள்ளவர்கள், இந்த முறை சிகிச்சைக்கு பின், முழுமையான பார்வை பெறுகின்றனர். இதை, "அபரோப்பியா' என்று அழைக்கிறோம்.
லேசர் முறையில், பாதி, "பிலேட்' முறையிலும், பாதி, "லேசர்' (எக்சைமர்) வழியாகவும் சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதுள்ள, "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' முறை சிகிச்சையில், லாசிக் சிகிச்சை முழுவதும்,"பெம்டோசெகண்ட்' ((femtosecond) லேசர் மூலம் செய்யப்படுகிறது. இதன் மூலம், பார்வை குறைபாடு சீராவது மட்டும் இல்லாமல், பார்வைத் திறனும் நன்றாக இருக்கும். இந்த சிகிச்சை முறையில், பக்க விளைவுகளும் குறைவு. லேசர் முறை சிகிச்சையில், பெரும்பாலான பக்கவிளைவுகள் கிடையாது. கண் கூசுவது, கண் உறுத்தல் போன்ற சிறிய விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். அவ்வாறு வந்தாலும், அதற்கு மருந்து மூலம் தீர்வு காணப்படும். 18 வயது நிறைந்தவர்கள், இரண்டு கண்களிலும் பார்வைத் திறன் குறைபாட்டில் சமநிலை அடைந்தவர்கள் மற்றும் கருவிழியில் வேறு எந்த குறைபாடும் இல்லாதவர்கள், இந்த சிகிச்சைக்கு உகந்தவர்கள். சில நேரங்களில், சிறு வயதிலேயே, "அபரோப்பியா' காரணமாக கண் பார்வை குறைவு ஏற்பட்டால், இந்த சிகிச்சை செய்யலாம். இந்த, "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' முறை லேசர் சிகிச்சைக்கு, மயக்கம் கொடுக்க தேவையில்லை. கண்களில் சொட்டு மருந்து (Local Anesthesia) மூலமாக உணர்ச்சிகளை குறைக்க வைத்து, லேசர் சிகிச்சை செய்யப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை செய்ய தேவையில்லை. ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை மற்றும் ஆய்வு முடிவுறும். இரண்டு கண்களுக்கும் ஒரே நாளில், ஒரே முறையில் சிகிச்சை பெறலாம். முதல் இரண்டு நாட்கள், கண்ணில் நீர் கசிவு மற்றும் உறுத்தல் இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகளிடம், ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். "ஹைப்பர்மெட்ரோபியா' எனும் கண் குறைபாடு ஏற்பட்டால், தூரப் பார்வை குறைவாக தெரியும். "பிளஸ் பவர்' அதிகமாக இருக்கும். இதற்கும் லேசர் முறை சிகிச்சை செய்யலாம். குழந்தைகளுக்கு கண் குறைபாடு இருந்தால், சிறு வயதிலேயே அதற்கான தீர்வு, கண்ணாடி அணிய வேண்டும். இல்லையெனில், பிற்காலத்தில் கண்பார்வை சீராக வராமல், குறைவாகவே நின்று விடும்.

Tuesday, July 26, 2011

80 கிலோ இராட்சத கட்டியுடன் வாழும் மனிதன்.

வியட்னாம் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய  nguyen duy hai என்பவரது வலது காலில் கடந்த 30 வருடங்களாக கட்டி வளர்ந்து இன்று 80 கிலோ எடையுடன் அது காணப்படுவது ஆச்சரியமான ஒன்றாகும்.
இவரது காலில் ஏற்பட்ட வேறு நோய் ஒன்றுக்காக 14 வருடங்களுக்கு முன்னர் வலது கால் வெட்டப்பட்டது. ஆனால் அறியாமை, வறுமை, அசிரத்தை காரணமாக இவரது குடும்பத்தினர் கட்டியை கவனிக்க தவறி விட்டனர்.
அளவுக்கு மீறி வளர்ந்துள்ள இக்கட்டியினால் இவரால் தற்போது உட்காரவும், படுக்கவும் மாத்திரம் தான் முடிகின்றது. எழுந்து நடக்க  முடியாத நிலையில் உள்ள இவரை 61 வயது நிரம்பிய தாயே கவனித்து வருகிறார்.
இவருக்கு ஏற்பட்டுள்ள இந்நோயானது  புற்று நோய் அல்ல. மரபணு குழப்பத்தால் ஏற்பட்டதாக இருக்கக் கூடுமென கருதுகின்றனர்.
எப்போது பார்த்தாலும் முறுவல் பூத்த முகத்துடன் காணப்படும் இவர் தனது நோய்க்கு  சத்திர சிகிச்சை மேற்கொள்ள  மனிதாபிமானிகள், தொண்டர் அமைப்புக்கள் ஆகியவற்றின் நிதி அன்பளிப்புக்களை கோரி உள்ளார்.


 நன்றி-மனிதன்.