Saturday, January 28, 2012

உடல் எடையைக் குறைக்க வழி.

“பால் கலக்காத “டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.
உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

Friday, January 27, 2012

அதிசயம் ! கருவுற்ற மூன்று வயதுக்குழந்தை

 சமீபகாலமாக உலகில் நடக்கும் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகளின் தகவல்கள் அதிகமாக வெளிவருகின்றன. பெரு நாட்டில் 3 வயது சிறுவனின் வயிற்றுக்குள் குழந்தையின் கரு இருப்பதாக தகவல் வந்துள்ளதை அந்நாட்டில் உள்ள சிலாவோ நகரை சேர்ந்த மருத்துவர் கார்லோஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து கார்லோஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த அசாதாரண விளைவு 5 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படலாம் எனறும், சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவில் மூளை, இருதயம், நுரையீரல், குடல் போன்ற உறுப்புகள் எதுவும் உருவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 மேலும் இதன் அடிப்படையில் ஆய்வுசெய்தால், இரட்டை குழந்தை கருக்குள் தாயின் வயிற்றில் உருவாகி அதில் ஒன்று சரியாக வளர்ச்சி பெற்று குழந்தையாக மாறியதும், மற்றொரு கரு அதனுள் ஊடுருவி வளர்ச்சி பெறாமல் போனதால் இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் விரைவில் சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவை அகற்ற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
 நன்றி, மனிதன்

Thursday, January 26, 2012

மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

இந்தியாவில் திருப்பூர் மாவட்டத்தில் காணப்படும் அரசு மருத்துவமனையில் மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தையை 24 மணி நேரமும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த சுப்ரமணி மனைவி தெய்வாள். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த பெண் குழந்தையின் பின்புறம் முதுகு பகுதியில் சதைப்பற்றுடன் மூன்றாவது கை போல் வளர்த்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் கருத்து தெரிவிக்கையில், மூன்று கிலோ எடையுடன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. குழந்தையின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.
மேலும் நல்ல உடல் ஆரோக்கியம் வந்ததும் பெற்றோர் அனுமதியுடன் பின்பகுதியில் வளர்ந்துள்ள கை போன்ற சதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தண்டுவடம் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 நன்றி, மனிதன் 

Wednesday, January 25, 2012

பொம்மை விமானம்

அமெரிக்காவி்ற்கு பொம்மை விமானத்தை அனுப்புகிறது ஈரான்.

ஈரான் வான்எல்லைப்பகுதியில், அத்துமீறி நுழந்தை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஈரான் ராணுவத்தினரால் சுட்டுவீழத்தப்பட்டது. அந்த விமானத்தை போன்று மாதிரி பொம்மை விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 5-ம் தேதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியையொட்டிஉள்ள ஈரான் ராணுவ முகாம்களை வேவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய ஆர்.-க்யூ-170 என்ற ஆளில்லா உளவு விமானம் ஈரான் ராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.அந்த விமானம் தற்போது ஈரான் வசம் உள்ளது. இதையறித்த அமெரி்க்கா, அந்த ஆளில்லா உளவு விமானத்தை திருப்பிதர ஈரானுக்கு கோரிக்கை விடுத்தது.
இது குறித்து ஈரான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க திருப்பி கேட்ட உளவு விமானத்திற்கு பதிலாக ‌பொம்மை விமானம் ஒன்றை அதே போன்று தயாரித்துள்ளளோம் , 30 செ.மீ. நீளமும், 14 செ.மீ. அகலும் கொண்ட பொம்மை விமானம் 70 ஆயிரம் ரியால், (6 டாலர்) மதிப்புள்ளது. இந்த பொம்மை விமானத்தை, வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரான் நாட்டின் இஸ்லாமிய குடியரசு தோன்றியதன் 34-ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது . அப்போது அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கவுள்ளோம். இவ்வாறு அந்த வானொலி வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.


Tuesday, January 24, 2012

கறிவேப்பிலையின் முத்தான பயன்கள்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறுமணமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. சமையலில் சேர்த்து சாப்பிடும்போது நாம் மிகவும் உதாசீனமாக தூக்கி எறிந்துவிடுகிறோம். கறிவேப்பிலையை சமையலில் சிதைக்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணசக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களைக் கொண்டது.
சிறு வயதில் ஏற்படும் இளநரையை மாற்ற கறிவேப்பிலையை சமைக்காமல் சாப்பிடலாம். பார்வைக் கோளாறுகள் நீக்கி கண்கள் பிரகாசமாகும். முக வசீகரம் தரக்கூடிய தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைக்கக்கூடியது. முடி உதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து 21 நாட்கள் காலை மாலை இருவேளை சாப்பிட நீரிழிவு குறையும். மூல நோய், வெண்குஷ்டம், தோல் வியாதிகள் நீங்க கறிவேப்பிலை ஒரு முத்தான சஞ்சீவிக் கீரையாகும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலியைப் போக்கும் உன்னதமான 
கீரையாகும்.
தயாரிக்கும் முறை: ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து சுத்தமாக கழுவி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து வடிகட்டி, தேன், பனங்கற்கண்டு அல்லது பேரீட்சை ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து கலந்து சாப்பிடலாம். தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். காபி, டீக்கு பதிலாக அருந்த மிகவும் ஏற்ற பானம்.
சர்க்கரையை நாம் சேர்த்துக் கொள்வதால் நமது உடலிலுள்ள வைட்டமின் சத்துக்களை அது உறிஞ்சிவிடுகிறது. அதனை ஈடுசெய்ய மேற்கூறிய கறிவேப்பிலை நீர் சாப்பிடலாம். நமது அழகான முடியையும் கண்களையும் பேணிக்காக்கும் அற்புதமான கீரை கறிவேப்பிலையே.
Thanks to Payanulla Thakavalkal

Monday, January 23, 2012

பில்கேட்ஸ் அதிர்ச்சி

மைக்ரோசாப்ட் இளம் சாதனையாளர் பாக். சிறுமி சாவு
 உலகின் இளம் மைக்ரோசாப்ட் சாதனையாளர் என்ற பெயர் பெற்ற பாகிஸ்தான் சிறுமி உடல்நலக் குறைவால் பரிதாபமாக இறந்தாள்.  இதை அறிந்து மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி அர்பா கரீம் ரன்தவா. வயது 16. தனது 9 வயதிலேயே சாப்ட்வேர் துறையில் அபாரமான அறிவுடன் திகழ்ந்தாள். இதையடுத்து உலகின் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இளம் சாதனையாளர் விருது இவருக்கு கடந்த 2004ம் ஆண்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து சாப்ட்வேர் துறையில் ஈடுபாடு காட்டி வந்த அர்பாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.  கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி சிறுமிக்கு வலிப்பு நோய் வந்ததால், உடனடியாக லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். 
இதை அறிந்த மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ், சிகிச்சைக்கான செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அமெரிக்காவில் மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அர்பா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து சிறுமியின் தந்தை அம்ஜத் கரீம் கூறுகையில், என் மகள் இறந்த செய்தி கேட்டு பில்கேட்ஸ் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அர்பானின் திறனை உலகறிய செய்தவர் பில்கேட்ஸ். அவள் இப்போது மறைந்துவிட்டாலும், உலகில் உள்ளவர்களின் அன்பு அவளுக்கு கிடைத்தது. அதற்காக பில்கேட்சுக்கு நன்றி தெரிவித்து கொண்டேன் என்றார்

Sunday, January 22, 2012

அசத்தல் ஏடிஎம் மெஷின்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சர்வதேச எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. பல அறிவியல் கண்டுபிடிப்புகள் இதில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் பலரையும் அதிசயிக்க வைத்த கண்டுபிடிப்பு பழைய எலக்ட்ரானிக் பொருட்களை பெற்றுக்கொண்டு பணம் தரும் ஏடிஎம் மெஷின். தேவையற்ற செல்போன்கள், ஐபாட், ஐபேட், எம்பி3 பிளேயர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இதில் போடலாம். அதற்கான டிரேயில் முதலில் பொருளை வைக்க வேண்டும். சில வினாடிகளில் அதை கருவி உள்ளிழுத்துக் கொள்கிறது. அதை பல கோணங்களில் ஸ்கேன் செய்து தரத்தை மதிப்பிடுகிறது. அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவல் திரையில் மின்னுகிறது. தொகை நமக்கு ஓகே என்றால் அதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனே பணம் வெளியே வரும். தொகை கட்டுபடி ஆகாவிட்டால் கேன்சல் என அழுத்த வேண்டும். பொருள் வெளியே வந்துவிடும்.

பில் போவெல் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்துள்ளார். பழைய எலக்ட்ரானிக் பொருட்களை குப்பையில் வீசுவது தவிர்க்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இந்த கருத்தை உணர்த்தும் வகையில் ஈக்கோ ஏடிஎம்என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார் பில் போவெல். கணிசமான பழைய பொருட்கள் சேர்ந்த பிறகு, அவை அகற்றப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அந்த பொருட்களில் இருந்து பிளாஸ்டிக், உலோகங்கள் என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும். இதுபற்றி பில் போவெல் மேலும் கூறுகையில், எலக்ட்ரானிக் கழிவுகளை குப்பையோடு குப்பையாக வீசுவது மிகவும் தவறு. அது மண்வளத்தை பாதிக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இவற்றை பாதுகாப்பான முறையில் அழிப்பது அவசியம். அந்த கருத்தை வலியுறுத்தும் வகையிலேயே எலக்ட்ரானிக் குப்பை ஏடிஎம்மை உருவாக்கினேன்’’ என்றார். கண்காட்சியில் இந்த ஏடிஎம்முக்கு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, January 21, 2012

செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!

 "சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும்" என முஸ்லிம் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வரும் 'சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை எழுதி ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை இழிவு படுத்திய சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் அவருக்கான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இருப்பதாக ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பான  ரஸா அகடாமி தெரிவித்துள்ளது.

Friday, January 20, 2012

லேசர் தொழில்நுட்பம்

லேசர் ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தபோது, உற்பத்தித் துறையிலிருந்து மருத்துவத் துறை வரை அனைத்துத் துறைகளிலும் இந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. வரும் 2020-க்குள் சிறிய மூலக்கூறுகளைக் கண்டறியும் வகையில் மிக நுண்ணிய லேசர் ஒளிக்கற்றைகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் வடிவமைப்பிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளரான மணிலால் பூமிக், கார்பன் மோனாக்சைடு லேசரைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு, லேசர் தொழில்நுட்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று விஞ்ஞானிகள் கூறும் அளவுக்கு அவரது கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருந்தது. அவரைப் போன்று ஆராய்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்களையும், விஞ்ஞான மேதைகளையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தவும், கொண்டாடவும் தருணம் வந்துள்ளது.

Thursday, January 19, 2012

இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டுபிடிக்க எளிய முறை.

இரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக கண்டுபிடிப்பது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் மைக்ரோசாப்ட் ஆய்வு பிரிவு இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டது. இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது: கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் என்சைம்களை அளவிடுவதன் மூலமாகவும் சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளலாம். இதற்காக பிரத்யேக எலக்ட்ரோடுகள் பொருத்தி கான்டாக்ட் லென்சை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதன் மூலமாகவே சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளலாம். இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

Tuesday, January 17, 2012

மறதிக்கு மருந்து

மறதி நோய்க்கு தீர்வுகாணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது. யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு நடத்தின. ஆய்வில் கிடைத்த தகவல் வருமாறு: பொதுவாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது இதயம் தான்.
இதே நினைப்பு மூளைச்செயல்பாட்டையும் பாதிக்கும். இதயம், மூளை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்து பாதிப்புகளுக்கும் எளிதில் நிவாரணம் உறுதி. மேலும் மறதி நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த செயல்பாடுகள் மறதிக்கு முதல் மருந்தாக அமையும்.

Monday, January 16, 2012

கூகிளின் மற்றொரு சாதனை.

பள்ளி மாணவர்களுக்கான யூடியூப் சேனல்.
முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. 
இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்து பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான கூகிள் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். யூடியுபில் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன. இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)
பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் யுடியூபில் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் குறித்தான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம். மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் யூடியுபின் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
 

Sunday, January 15, 2012

திருடர்களைப்பிடிக்க ஒரு இணைய தளம்.

வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவை ஒரு ரகம் என்றால், கடைகள், ஷாப்பிங் மால்களில் யாருக்கும் தெரியாமல் நைசாக பொருட்களை லவட்டுவது இன்னொரு ரகம். பெரிய ஆள் தோரணையில் இருப்பவர்கள்கூட இதுபோல கேவல திருட்டில் ஈடுபடுவார்கள் என்பதால் கண்டுபிடிப்பது கடினம். இதுபோன்ற டீசன்ட்கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியாக ஆஸ்திரேலிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலர் சேர்ந்து ஹூ-டியூப்என்ற பெயரில் இணையதளம் தொடங்கியிருக்கிறார்கள். 
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் திருட்டு தொடர்பாக பதிவாகும் காட்சிகளை இந்த இணையதளத்தில் அப்லோடு செய்யலாம். திருடன் பற்றி தகவல்கள் தெரிந்தால் அதையும் பதிவு செய்து வைக்கலாம். இணையதளத்தை பார்க்கும் மற்ற கடைக்காரர்கள் உஷாராவதற்காக இந்த வசதி. 
இணையதளம் ஆரம்பித்து 3 மாதத்தில் மொத்தம் 127 காட்சிகளை பல பகுதிகளை சேர்ந்த கடைக்காரர்களும் அப்லோடு செய்திருக்கிறார்கள். இதன் உதவியுடன் 2 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Saturday, January 14, 2012

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை!

புற்று நோய் சிகிச்சை நிபுணர் சுப்ரமணியன்: புற்று நோயை பொறுத்தவரை அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு, கீமோதெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதில், கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயன் அளிக்கக்கூடியது.இந்த கதிர்வீச்சு சிகிச்சைகள் தினமும், 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஆறு வாரங்கள் வரை அளிக்கப்படும். ஆனால், தற்போது வந்திருக்கும், "ரேபிட் ஆர்க்' சிகிச்சையின் மூலம், முன்பை விட பல மடங்கு துல்லியமாகவும், வேகமாகவும் சிகிச்சை அளிக்க முடியும்.இந்த சிகிச்சை,"லினாக்' இயந்திரம் மூலம் தரப்படுகிறது. புற்று நோயாளிக்கு, சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்த பின், நோயின் தன்மை, நிலை ஆகியவற்றை கண்டறிந்து, நோயாளிக்கு, "ரேப்பிட் ஆர்க்' சிகிச்சையைத் தொடங்குவோம்.நோயாளியை,"லினாக்' இயந்திரத்தின் கீழே படுக்க வைப்போம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மூலம் உடல் அசையாமல், பிடித்துக் கொள்ளப்படும். அந்த இயந்திரத்தில் உள்ள ஸ்கேன் கருவி, நோயாளியைப் படம் பிடிக்கும். அந்தப் படத்தைக் கொண்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் கண்டறியப்பட்டு, கதிர் வீச்சு மூலம் அழிக்கப்படும். முந்தைய சிகிச்சையில் ஒரே பக்கத்தில் இருந்து, கதிர் வீச்சு செலுத்தப்படும். அதனால், புற்று நோய் பாதிப்புள்ள திசுவுடன் சேர்ந்து நல்ல திசுவும் ஓரளவு பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த, "ரேப்பிட் ஆர்க்' சிகிச்சை மூன்றே நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். இது தவிர, "ஸ்கேட்டரிங்' எனும் கதிர்வீச்சு சிதறலும், மிகக் குறைவான அளவிலேயே இருக்கும். இது போன்ற காரணங்களால், நல்ல திசுக்கள் சிறிதளவும் பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை.நோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் குறையவும் வாய்ப்புண்டு. மிகக் குறுகிய நேரத்தில், துல்லிய மாக சிகிச்சை அளிக்கும் இந்த சிகிச்சையால், நோயாளிக்குப் பக்க விளைவுகள் இல்லை!
Thanks To Payanulla Thakavalkal.

Friday, January 13, 2012

மரத்திலிருந்து மின்சாரம்


கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு, கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய தனது ஆய்வு அறிக்கையை இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம் சமர்ப்பித்துள்ளது.
சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிறிசிடியா மரத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், அத்துடன் மிகக்குறைந்தளவிலான முதலீட்டில் அதிக பயனைப் பெற முடியும் என்றும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
Thanks to

Thursday, January 12, 2012

அளவுக்கு மீறிய உடற்பயிற்சி ஆபத்து : டாக்டர்கள் எச்சரிக்கை

உடல் பருமனை குறைக்க மருத்துவர்களால் பல வழிகள் பரிந்துரைக்கப்படுவது வாடிக்கை. உடற்பயிற்சிகள் இதில் தவிர்க்க இயலாதது. மிகக் குறைந்த பட்சமாக நடை பயிற்சி நிச்சயம் இருக்கும். இந்நிலையில், உடல் பருமன் மற்றும் அதனை குறைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் செய்தால் அடிக்கடி ஜலதோஷம், சளி பிரச்னை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. உடல்பருமனை கட்டுப்படுத்த மட்டுமின்றி ஆரோக்கியத்தை பேணவும் உடற்பயிற்சி அவசியம். ஆனால் அது அளவோடு இருப்பது அத்தியாவசியம். இங்கிலாந்தில் உள்ள லோபரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவல் இது. அதன் விவரம் வருமாறு: தினசரி நடை பயிற்சி மேற்கொள்வது உடல் பருமன் குறைப்பு, ஆரோக்கியம், நோய்த்தாக்குதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அனைத்து வயதினரும் தினசரி 30 நிமிட நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இவை சாத்தியமாகிறது. 
குறிப்பாக ஜலதோஷம் மற்றும் சளி பிரச்னையில் இருந்து 30 சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. மாறாக, ஓட்டம் போன்ற அதிவேக செயல்பாடுகளுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது. ஒரு உறுப்பு ஒத்துழைக்க மறுத்தாலும் அது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எதுவாக இருந்தாலும் அளவோடு செய்ய வேண்டும். மருத்துவ அறிவுரையுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனடாவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வோ, உடல் பருமன் குறைப்பில் ஈடுபடுபவர்கள் உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட தங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் முதலில் பட்டியலிட வேண்டும். அடுத்த கட்டமாக அதனை தினசரி பார்வையிடுவதுடன் பின்பற்றுவது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளது. இதுதான் உடல்பருமன் குறைப்பில் முதல் நடவடிக்கையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்தி உள்ளது.

Wednesday, January 11, 2012

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்

எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.
ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடரபு குறித்து ஆய்வு செய்தனர்.
இவர்கள் நேரடியாக குழந்தைகளை இந்த ஆய்வில் பங்கேற்கவைக்காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
அதாவது அமெரிக்கா, கனடா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட சுமார் 12 ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு குழந்தைகளின் உடல் அசைவுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின்படி, எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் சோம்பி உட்கார்ந்திருக்கும் குழந்தைகளை விட கல்வித் திறனில் சிறந்து விளங்குவார்கள்.
ஏனெனில், விளையாடும் போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. இதனால் மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தைகள் நன்கு ஓடியாடுவதுதான் அந்த குழந்தையின் கல்வித் திறனை அளவிடும் கருவியாகும் என்று இந்த ஆய்வு முடிவு கூறியுள்ளது.
உங்கள் குழந்தை இனி தாராளமாக ஓடியாடி மகிழ்ச்சியாக விளையாட நீங்கள் அனுமதிப்பீர்கள் அல்லவா?

Tuesday, January 10, 2012

பயோ-டேட்டா..... அமெரிக்கா

 பெயர் : அமெரிக்கா

மறைமுகப் பெயர்
: உலக வல்லாதிக்க அரசு

தொழில் :
ஆயுத விற்பனை மற்றும் பெட்ரோலிய கொள்ளை

உப தொழில்
: ஊரை அடிச்சு உலையில் போடுவது

நெருங்கிய நண்பர்கள் :
இஸ்ரேல் மற்றும் பிரிட்டன்

பிற நண்பர்கள்
: ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா,இந்தியா மற்றும் பாகிஸ்தான்

கொள்கை :
முதலாளித்துவம்

முகம் :
இரட்டை முகம்

குணம் :
நயவஞ்சகம்
பலம் : அதி நவீன ஆயுதங்கள்
அசுர பலம் : வான் வழித் தாக்குதல்
பலவீனம் : தரைப்படையில் பலஹீனர்கள். நிலம்  வழித் தாக்குததில் பேரிழப்பை சந்திப்பது

வீழ்த்தியது : கம்யூனிசம்(ரஷ்யாவில் இருந்து)

வீழ்த்த நினைப்பது
: இஸ்லாம் மற்றும் கம்யுனிசம்(சீனா)

வீழப்போவது
: அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)

அமெரிக்கர்கள்
: வாழப்பிறந்தவர்கள்

மற்றவர்கள் :
சாகப் பிறந்தவர்கள் அல்லது எக்கேடு கெட்டா எனக்கென்ன?

தீவிரவாதிகள் :
தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும் அனைவரும்

தீவிரவாதத்திற்கு எதிரான போர் :
கொள்ளை அடிக்க வசதியாக ஏற்படுத்திகொண்டது

சமீபத்தில் கொள்ளை அடித்த இடம் 
: ஈராக்

தற்போது கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கும் இடம் :
லிபியா

சமீபத்திய சந்தோசம்
: ஒசாமா பின் லாடனை கொன்றது

நீண்டகால சந்தோசம் :
உலகம் இவனை நல்லவன் என்று இன்னும் நம்புவது

அதிபர்
: போர் செய்ய மற்றும் கொள்ளை அடிக்க திட்டம் போடுபவர்

மறந்தது :
எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மையை

மறக்காதது :
ஏதாவது ஒரு சப்ப காரணத்தை சொல்லி போர் செய்வதை

உலகம் :
தனது அடாவடிகளை வேடிக்கை பார்க்கும் உருண்டை

சமீபத்திய எரிச்சல் :
தலிபான்
நீண்டகால எரிச்சல்  :  ஈரான்  மற்றும் சீனா

ஒரே சாதனை :
இன்னும் வல்லரசாக இருப்பது
 
நன்றி, டீக்கடை

Saturday, January 7, 2012

ஆரோக்கியமாக வாழ...

* தூங்கப் போவதற்கு முன்தினமும் கைகால்கள்முகத்தை கழுவுங்கள்பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்துநன்றாக வாயை கொப்பளியுங்கள்.
* தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்றுஉங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால்உடலில் ஏற்படும் சுருக்கங்கள்படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.
உணவில் பச்சை காய்கறிகளையும்பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்தொந்தியும்வயிறும் குறையும்.
குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும்கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
படுக்கைக்கு அருகிலும்வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும்ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
* முளைவிட்ட கடலைசிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதைகடமையாக கொள்ளவும்.
* உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.
* அதிக சூடுஅதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால்மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும்பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்அதுஉடல் அழகுக்கும்ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
தினமும் காலையில் டீயோகாபியோ குடிப்பதற்கு முன்ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.