சீனாவைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவரின் முகத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் கொம்பு ஒன்று வளர்ந்துள்ளது. ஹெனான் மாகாணத்திலுள்ள லின் லோயு கிராமத்தைச் சேர்ந்த 101 வய தான ஸாங் றுயிபாங்கின் நெற்றியில் கடந்த வருடமே மேற்படி அச்சுறுத்தும் வகையிலான கொம்பு உருவாக ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அக்கொம்பு 2 அங்குல அளவிற்கு வளர்ந்துள்ளது. தனது முகத்தில் வளர்ந்துள்ள இந்த அவலட்சணமான கொம்பால் மேற்படி மூதாட்டி மிகவும் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸாங் றுயிபாங்கின் 6 மகன்மாரில் கடைசி மகனான ஸாங் குயோஸெங் (60 வயது) விபரிக்கையில், தனது தாயாரின் நெற்றியிலுள்ள தோல்பகுதி கடினமடைந்தே கொம்பை ஒத்த இந்த தோற்றவமைப்பு உருவானதாகவும் தாம் அது தொடர்பில் பெரிதாக கவனமெடுக்கவில்லை எனவும் கூறினார்.
இந்த அதிசய கொம்பு குறித்து ஸாங் றுயி பாங்கின் மூத்த மகன் ஸங் (82 வயது) கூறுகையில், "எனது தாயாரின் நெற்றியின் வலது பக்கத்தில் புதிதாக ஒரு அடையாளம் தோன்ற ஆரம்பித்துள்ளது. அதுவும் ஒரு கொம்பு என்றே நான் நினைக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
மேற்படி பெண்ணிடம் வளர்ந்துள்ள கொம்புருவானது தோலினுள் சில அங்குல ஆழத்திற்கு வளர்ச்சியை கொண்டுள்ளது.
நன்றி,லங்காசிறி
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.