Sunday, June 20, 2010

உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்

உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் நிறுவும் பணி :
சிலி பாலைவனத்தில் தொடங்கியது



லகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை உருவாக்கும் பணி சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் தொடங்கியது. இதற்காக வானியல் ஆராய்ச்சி நிபுணர் குழு சிலி நாட்டுக்குச் சென்றுள்ளது. இந்த டெலஸ்கோப் நிறுவும் பணி வருகிற 2018 ஆண்டு நிறைவடையும்.
உலக நாடுகள் பலவும் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. அதில் பிரிட்டனில் இருந்து செயல்படும் ஈரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி ஆராய்ச்சி மையமும் (European Southern Observatory , ஒன்று. பல நாடுகளைச் சேர்ந்த வானியல் நிபுணர்கள் இணைந்து செயல்படும் மையம் இது. இந்த மையம் தான் சிலி நாட்டில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில், உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான அறிஞர் குழுவில சிலி நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர், ஜெர்மன் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த மிகப்பெரிய டெலஸ்கோப்பிற்கு ஈரோப்பியன் எக்ஸ்ட்ரீம்லி லார்ஜ் டெலஸ்கோப் (European Extremely Large Telescope என பெயரிடப்பட்டுள்ளது.
138 அடி சுற்றளவுள்ள இந்த டெலஸ்கோப்பை சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் நிறுவக் காரணம், இந்தப் பகுதியில் தான் வருடத்தில் முழுக்காலமும் வானம் மேகமின்றி காணப்படுகிறது. வான ஆராய்ச்சிகளுக்கு மிகவும் ஏற்றப் பகுதியாகக் கருதப்படும் இங்கு ஏற்கனவே ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2011 டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கும் இந்த மாபெரும் டெலஸ்கோப் பணி, ரூ.540 கோடியில் செய்யப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலம் வான ஆராய்ச்சிகள் பல மடங்கு மேம்பாடு அடையும் என்றும், இதனால் பூமி மற்றும் விண்வெளி குறித்த அரிய உண்மைகளை மனிதன் விரைவாக அறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.
நன்றி,தமிழ்வாணன்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.