பொதுவான ஒரேயொரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து உயிர் வாழும் அபூர்வ இரட்டை பெண் குழந்தைகளை படத்தில் காணலாம். அமெரிக்க அரிஸோனா மாநிலத்திலுள்ள குயீன் கிறீக் நகரைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர் பெய்லி ஆகிய மேற்படி இரட்டைக் குழந்தைகள், தனியொரு இருதயம் மற்றும் ஈரலுடன் மார்பு எலும்பிலிருந்து தொப்புள் வரை இணைப்பைக் கொண்டுள்ளன. இக் குழந்தைகள் வளர்ந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் இரு வருட காலப் பகுதியில் அவர்களை வேறு பிரிக்காவிட்டால், அவர்கள் உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு குழந்தைகளை வேறு பிரிக்கும் போது ஒரு குழந்தைக்கு இருதய மாற்று சிகிச்சையும் மற்றைய குழந்தைக்கு ஈரல் மாற்று சிகிச்சையும் செய்ய நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி குழந்தைகளின் பெற்றோரான டோர் (34 வயது) மற்றும் மான்டி (32 வயது) ஆகியோர் அக் குழந்தைகளை வேறு பிரிக்கும் முகமாக சியட்டில் சிறுவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக வேறு பிரிக்கப்படும் பட்சத்தில், ஒரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து வேறு பிரிக்கப்பட்ட உலகின் முதலாவது இரட்டைக் குழந்தைகள் என்ற பெருமையை அவை பெறும்.
டோர், மான்டா தம்பதிக்கு ஏற்கனவே 4 பிள்ளைகள் உள்ளனர்.
நன்றி.லங்காசிறிநியூ
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.