உலகில் ஒட்டிப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் எல்லோரையும் விட இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் பொதுவாக இருக்கின்றது. ஒரேயொரு மூளையுடைய ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்த உலகத்திலேயே இவர்கள் மாத்திரம்தான். ரரிஅனா-கிரிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு தற்போது மூன்று வயது.இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் இருப்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவரை அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கின்றமை சாத்தியம் அல்ல என்று வைத்தியர்கள் திட்டவட்டமாகக் கூறி விட்டனர். இவர்களுக்கு வேறு யாரிடமும் காணவே முடியாத தனித்துவமான சிறப்புத் தன்மைகள் பல இருக்கின்றன என்று பெற்றோர் கூறுகின்றனர்.
குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிரிஸ்ராவும், கிரிஸ்ராவின் கண்களால் ரரிஅனாவும் காட்சிகளைக் காண முடிகின்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.சாதாரணமாக ஒட்டிப் பிறந்த ஏனைய இரட்டைக் குழந்தைகளால் செய்ய முடியாத இவ்வாறான பல செயல்களை இந்த இருவரும் செய்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் மருத்துவ உலகம் இவர்களைப் பார்த்து அதிசயிக்கின்றது.
உலகத்தின் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் தாண்டி இவர்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இவர்களால் நன்றாகவே நடந்து திரிய முடிகிறது.இவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் உண்டு. உதரணமாக எந்தப் பாதையால் நடக்கலாம்?, என்ன செய்து கொள்ளலாம்? போன்ற விடயங்களில் இவர்களுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுந்துவிடத்தான் செய்கின்றன.
நன்றி,தமிழுலகம்
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.